சென்னை: தனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான் என ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதமாகும். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். நான் நியமித்த மாவட்டச் செயலாளர்களில் 100 பேரை என்னை சந்திக்கவிடாமல் அன்புமணி தடுத்தார். என்னை சந்திக்க வராத 100 பேருக்கு மாற்றாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தேன் என போட்டி பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.