வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து ராகுல்காந்தி பிரச்சாரம்
வயநாடு: வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து ராகுல்காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். வயநாடு தொகுதியில் மக்கள் மத்தியில் உரையாற்றுவது என் குடும்பத்தாருடன் உரையாடுவதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. நம் நாட்டில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது அன்புக்கும் வெறுப்புக்கும் இடையே நடக்கும் போராட்டம் என ராகுல்காந்தி கூறினார்.