தூத்துக்குடி : தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து
வைத்தார். தூத்துக்குடி -மதுரை புறவழிச்சாலையில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப் 6, வி.எப் 7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.