டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நிறைவடைந்து விட்டது என்று இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின் அடிப்படையில் அகர வரிசையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது
Advertisement