தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் இன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்து. பொன்னேரி அருகே நெற்குன்றத்தில் 500 ஆண்டு பழமையான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. குளித்தலை அருகே இனுங்கூரில் 500 ஆண்டு பழமையான எல்லையம்மன் கோயிலில் 200 ஆண்டுக்கு பின் குடமுழுக்கு நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே சம்பை கிராமத்தில் காந்தாரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடந்தது. அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் 3 கோயில்களில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. விநாயகர் கோயில், ஸ்ரீராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில், ஸ்ரீமத் யோகி சங்கரானந்தா கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. சின்னசேலம் அருகே கூகையூரில் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடந்தது.
+
Advertisement