வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான ஆணையத்துக்கு மேலும் ஒராண்டு கால அவகாசத்தை நீட்டித்த தமிழ்நாடு அரசு..!!
சென்னை: வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு மேலும் ஒராண்டு கால அவகாசம் நீட்டித்தது. வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை வழங்க அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது. கடந்த ஜூலை 11ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.