சென்னை: ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்த ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதிமுக அழிவுப்பாதையில் செல்வதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.