பெய்ஜிங்: ரஷ்யா, ஜப்பான் நகரங்களை சுனாமி அலைகள் தாக்கிய நிலையில், சீனா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் எதிரொலியாக சீனா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி, யுரேகா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement