சென்னை: தமிழ்நாட்டில் பெறும் வரவேற்பைப் பெற்ற தோழி விடுதிகளை உதகை, திருப்பத்தூர், திருவாரூர், வீர சோழபுரம் பகுதிகளில் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 12 இடங்களில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் தோழி மகளிர் விடுதிகள் கட்டப்படும் என மகளிர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தமிழக அரசால் தொடங்கப்பட்டது தான் தோழி மகளிர் விடுதி. தமிழ்நாடு முழுவதும் 12 தோழி விடுதிகள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் உள்ளிட்ட இடங்களில் 12 விடுதிகள் கட்டப்படுகின்றன. இதை தொடர்ந்து உதகை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தோழி விடுதிகள் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது.
+
Advertisement