சென்னை: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் நேற்று கடிதம் எழுதியிருந்தார். நாளை இரவு தூத்துக்குடி வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement


