நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் நேற்றே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். சேதத்தின் முழு விவரங்களை தற்போதைக்கு கூற முடியாது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று பினராயி விஜயன் தெரிவித்தார். மீட்புப் பணிக்கு உதவுவதற்காக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளோம். முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியும் கேரளத்துக்கு வழங்கியுள்ளோம்.