காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரை
சென்னை: காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. தற்காலிக ஊழியர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கான வருடாந்திர பணி மதிப்பீடு தொடர்பான படிவங்களில் சாதி குறிப்பை நீக்க வேண்டும். சாதி பற்றிய தகவல்கள் மதிப்பீட்டில் பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் நீக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.