மதுரை: ஓரணியில் தமிழ்நாடு பெயரில் ஆதார் விவரம் வாங்கவில்லை. தவறான தகவல்களை அளித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுகவினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படியே உறுப்பினர்களை சேர்க்கிறோம். உறுப்பினர் சேர்க்கைக்கு சம்மதம் பெறுவதற்காக மட்டுமே ஓ.டி.பி. பெறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
+
Advertisement