உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கபில்சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
சென்னை: உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கபில்சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கபில்சிபலின் வெற்றி பார் அசோசியேஷன் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின். கபில் சிபல் வெற்றி அரசியலமைப்பு சட்ட விழுமியங்கள் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதி செய்கிறது. மக்கள் போற்றும் நீதி மற்றும் ஜனநாயக கொள்கைகள் கபில்சிபல் தலைமையில் நிலைநிறுத்தப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளார்.