டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு ஆதார், வோட்டர் ஐடியை ஆவணமாக பரிசீலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வாக்காளர் திருத்தத்தில் ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பதாக வழக்கறிஞர் கோபால் புகார் தெரிவித்திருந்தார். வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிராக காங்., கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலியா பக்சி அமர்வு . முறைகேடு கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட நபர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம். உலகில் எந்த ஆவணங்களையும் மோசடியாக தயாரிக்கலாம். மொத்தமாக பெயர்களை நீக்குவதைவிட மொத்தமாக பெயர்களை சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
+
Advertisement