கவின் கொலைக்கும் எனது பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை: கவின் உடனான உறவு குறித்து சுபாஷினி விளக்கம்..!!
நெல்லை: நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடனான உறவு குறித்து சுபாஷினி விளக்கம் அளித்துள்ளார். கவின் கொலைக்கும் எனது பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என சுபாஷினி வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். கவினுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு குறித்து எனக்கு மட்டும்தான் தெரியும். எனது பெற்றோரை தண்டிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எங்களது உறவு குறித்து யாரும் எந்த கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.