ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மீதான புகாரை ஒன்றிய அரசு விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஹிமான்ஷு பதக்கின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. தகவல் திருட்டு குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள்தான் புகார் அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்தான் புகாரை விசாரிக்க முடியும் எனவும் ஒன்றிய அரசு வாதிட்டது.
+
Advertisement