உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு
சென்னை: உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் மகளிர் உரிமை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் புதிய திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 15ம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.