பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு..!!
பெங்களூரு: பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. தனது வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரஜ்வல் கைது செய்யப்பட்டார். ஹசன் தொகுதி எம்.பி.யாக இருந்தபோது பல பெண்களை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததும் அம்பலமானது.