திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் தனி நபர் வழங்கும் ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய தனி நபர் வழங்கி உள்ளார். தனி நபர் வழங்கிய ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார். சிலை பிரதிஷ்டை தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. தனி நபர் வழங்கிய சிலையை பிரதிஷ்டை செய்யும் அனுமதிக்கு 2 வாரம் தடை விதித்தது நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா அமர்வு உத்தரவிட்டது.
+
Advertisement