சென்னை : உக்ரைனுக்கு எதிரான போருக்கு அனுப்பப்பட்டுள்ள கடலூர் மருத்துவ மாணவர் கிஷோரை மீட்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ரஷ்யாவில் மருத்துவம் படித்த கிஷோர் பொய் வழக்கில் சிறையில் வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், வலுக்கட்டாயமாக போருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
+