தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணைய வழியில் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது: டி.என்.பி.எஸ்.சி
சென்னை: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணைய வழியில் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது. மனுக்கள், முதல் மேல்முறையீட்டு மனுக்களை http://rtionline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனுப்பலாம். மனுக்களை தேர்வாணையத்துக்கு கைமுறையாக தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
  
  
  
   
