மத அடிப்படையிலேயே பஹல்காமில் அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்: மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: "தீவிரவாதிகளின் அடித்தளத்தை தகர்த்த வெற்றிநாள் தான் சிந்தூர் நடவடிக்கை. வகுப்புவாத விதையை தூவும் நோக்கத்திலேயே பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மத அடிப்படையிலேயே பஹல்காமில் அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தியாவுக்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் எதிரான சதிச்செயல்தான் பஹல்காம் தாக்குதல்" என மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார்.