இராமநாதபுரம்: ஜூன் 28, ஜூலை 1ல் இலங்கை கடற்படையால் கைதான 15 மீனவர்களுக்கு ஆக.14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 15 பேரையும் ஆக.14 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் வவுனியா சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது ரோந்து வந்த இலங்கை படை 15 பேரையும் கைது செய்தது.
+
Advertisement