ஆர்.எஸ்.மங்கலத்தில் ரூ.2.5கோடியில் சுகாதார மையம் அமைக்கப்படும்: அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் தகவல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நவீன அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய சுகாதார மையம் அமைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என சுகாதாரத்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறை தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ரூ.1.7 கோடியில் புதிய கட்டுமான பணிகள் தொடங்கி முடியும் நிலையில் உள்ளன என சுகாதாரத் திரை அதிகாரிகள் தெரிவித்தனர். சுகாதாரத்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.