சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ளன. புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டமும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை வேளாண் மண்டலத்தை சேர்பதற்கான மசோதா கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
+
Advertisement