டெல்லி: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான விடுதி, உணவு கட்டணம் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விடுதி, உணவு, பேருந்து கட்டணங்களை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டது. விடுதி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு கட்டணமாக ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதர கட்டணம் என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.36,000 முதல் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது.
+
Advertisement