தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26) வரும் நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானப் பயணிகளை அழைத்துச் செல்ல வருவோருக்கு பிரதான நுழைவு வாயிலில் அனுமதியில்லை. விமான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கடைசி நேர இடையூறுகளை தவிர்க்க 3 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் விமான நிலையம் வர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
+
Advertisement