குடியரசுத் தலைவர் மூலம் ஒன்றிய அரசு விளக்கம் கேட்டதை 22ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: ஆளுநர்கள் அதிகாரம் தொடர்பான தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் மூலம் ஒன்றிய அரசு விளக்கம் கேட்டதை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வரும் 22ம் தேதி விசாரிக்கிறது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சந்துர்கர் ஆகியோர் இந்த அமர்வில் உள்ளனர்.