வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் பிரதமர் மோடி மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல் ஆணையம் உறுதி
டெல்லி: வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் பிரதமர் மோடி மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராகுல் பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு கார்கேவுக்கும், மோடி பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு நட்டாவுக்கும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் குறித்து கார்கே, நட்டா அளித்த பதில்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.