சென்னை: அன்புமணி பொதுக்குழுவை கூட்டியிருப்பது சட்டவிரோதம் என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் வழக்கறிஞர் பாலு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படியே கூட்டப்படுவதாக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்தார். மேலும், பாமக பொதுக்குழு வரும் 16ம் தேதி நடக்கும் என சமூக வலைத்தளத்தில் வெளியான அறிவிப்பில் யார் வெளியிட்டார்கள் என்பது இல்லை. பாமக விதியின்படி ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒருவாரத்துக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டால் போதுமானது என அவர் கூறினார்.
+
Advertisement