விழுப்புரம்: விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உறுதிமொழி ஏற்று வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழியை முன்மொழிந்தார். தியாகத்தை போற்றுவோம், தியாகிகளின் இலக்கை நிறைவேற்ற பாடுபடுவோம். ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கத்தை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Advertisement