சென்னை: ஓ.பன்னீர்செல்வம்-நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.