டெல்லி: ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். விவாதத்தின் மீது மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது என்ன நடந்தது என்பது குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார். அவ்வாறு அவர் பேசுகையில், பாக். பொய் பிரச்சாரம் செய்தது; கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாக். மரியாதை செலுத்தியது. இந்தியாவின் நவீன ஏவுகணைகள் மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தோம். பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை எஸ்-400 ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழித்தோம். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பலத்தை உலகம் உணர்ந்தது. பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்திய ராணுவம் முறியடித்தது. பாக். தாக்குதல் நடத்தினால் எந்த நேரத்திலும் பதிலடி தர தயார் என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
+
Advertisement