உடுப்பி : அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, ஆன்லைன் மூலம் ₹21 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.உடுப்பி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், செல்போன் மூலம் விழிப்புணர்வை மேற்கொண்டாலும் தினமும் மோசடியில் சிக்குபவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டு செல்கிறது. இந்நிலையில் உடுப்பி டவுன் குற்றப்பிரிவு போலீசில் உடுப்பியை சேர்ந்த பாப்பீட்டர் மோரிங் லோபோ என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது செல்போன் எண்ணை வாட்ஸ் அப் குழுவில் இணைத்த மர்ம நபர்கள், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக நம்ப வைத்தனர். அதன்பேரில், சுமார் ₹21,39,903 தொகையை அனுப்பினேன். ஆனால், அவர்கள் கூறியபடி எனக்கு லாபத்தை தராமல் ஏமாற்றி விட்டனர் என கூறியுள்ளார்.
Advertisement