அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!!
சென்னை: அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2023ல் விருதுநகர் கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். ஆய்வு செய்ய அதிகாரிகள் செல்லும்போது பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என தெரிவித்தனர். உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் ஆலைகளை மூடி விட்டு சென்று விடுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கம், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலரை சேர்க்க உத்தரவிட்டதுமின்றி. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிக்கிறது என நீதிபதிகள் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.