நுங்கம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்ட இயந்திரம் பழுதால் கடும் போக்குவரத்து நெரிசல்..!!
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தெரேசா சர்ச் அருகே மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்ட இயந்திரம் பழுதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உத்தமர் காந்தி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வழியில் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மாற்று வழிகளை பயன்படுத்த போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.