ரஷ்யா: போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் போர் உலகப் போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்காவுக்கு புதின் எச்சரித்திருந்தார். ஏவுகணைகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்காவின் ஆபத்தான முடிவு என புதின் கூறியிருந்தார். உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதால் அமெரிக்காவும் அனுமதி அளித்தது. தங்கள் நாட்டு தொலை நோக்கி ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. நேட்டோ அமைப்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா போர் உதவி செய்த நிலையில் ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
Advertisement


