நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூரிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தென்காசி, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.