சென்னை: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நெல்லை நாலுமுக்கு - 10 செ.மீ., ஊத்து பகுதியில் 8.8 செ.மீ., காக்காச்சியில் 6.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கான தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட கூடுதலாக கிடைத்துள்ளது. 120 நாளில் கிடைக்க வேண்டிய மழை முதல் 40 நாட்களிலேயே கிடைத்துள்ளது என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
Advertisement