சென்னை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் எடுத்த நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரர் புகார் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதி நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த செல்வராஜ், சரவணன், மணிகண்டன் பஞ்சு ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு விசாரணையை ஜன.3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement