நெல்லை: நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட IT ஊழியர் கவின் இல்லத்தில் அவரது தாய், தந்தைக்கு அமைச்சர் நேரு, எம்.பி. கனிமொழி ஆறுதல் கூறினர். குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என கவின் பெற்றோரிடம் எம்.பி. கனிமொழி நம்பிக்கை தெரிவித்தார். சுர்ஜித் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என கவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement