டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள், தேர்வு மையம் வாரியாக வெளியிட்டது. நீட் முறைகேட்டால் எத்தனை மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பதை கண்டறிய தேர்வு மையம் வாரியாக முடிவுகளை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பீகார் மாநிலம் பாட்னா, குஜராத் மாநிலம் கோத்ராவில் மட்டுமே நீட் முறைகேட்டால் மாணவர்கள் பலனடைந்ததாக என்டிஏ விளக்கம் அளித்தது. ஆனால், டெலிகிராம் செயலி மூலம் நீட் வினாத்தாள் விற்பனை நடந்துள்ளதால் பல நகரங்களிலும் மாணவர்கள் பலனடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக ஒவ்வொரு மாணவர் பெற்ற மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement