சென்னை : சென்னை -நாகை 4 வழிச்சாலை பணிகள் 2026 மே மாதத்துக்குள் நிறைவடையும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 308 கி.மீ நீள சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.11,687 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் 2025 ஜூன் 30 வரை 157.4 கி.மீ. தூரம் வரை 4 வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்.பி. செல்வகணபதி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
+