சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் காணொலியில் மக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்ற மக்களுடன் காணொலியில் முதல்வர் உரையாடினார். மக்களிடம் கோரிக்கைகள் குறித்து விவரங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் கேட்டறிந்தார். மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மக்களுடன் காணொலியில் கலந்துரையாடினார். மேலும் கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
+
Advertisement