அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்!
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அங்கன்வாடி மையங்களில் முட்டைகளை பரிசோதித்தபின், குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கிய ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.