புதுக்கோட்டை : அதிமுக-பாஜக கூட்டணி மோசமான நிலைக்கு செல்லுமே தவிர முன்னேற வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஷோ காட்டுவதற்காகத்தான் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். புதுக்கோட்டையில் நடந்த உருட்டும் திருட்டும் நிகழ்ச்சி அதிமுகவுக்கு சொந்தமானதே என்றும் உதய் மின் திட்டத்தில் முந்தைய அதிமுக அரசு கையெழுத்திட்டதால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Advertisement