சேலம்: மேட்டூர் அணையில் 1.25 லட்சம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 75,000 முதல் 1.25 லட்சம் கனஅடி வரை உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்துவிடப்படும் என்பதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழுகொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட உள்ளதால் உபரிநீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
Advertisement


