சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6568 கன அடியில் இருந்து 8354 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாகவும், நீர் இருப்பு 91.88 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 12,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
+
Advertisement