தொடர் கண்காணிப்பு மூலம் மருத்துவக் கழிவுகள் உள்ளே கொண்டு வருவது தடுக்கப்பட்டு வருகிறது: ஐகோர்ட் கிளையில் அரசு பதில்
மதுரை: மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட எஸ்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் கழிவு கொட்டப்படுவதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு கோரி மனு ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், நெல்லை, தென்காசி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது. தொடர் கண்காணிப்பு மூலம் மருத்துவக் கழிவுகள் உள்ளே கொண்டு வருவது தடுக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு அறிக்கையை பதிவு செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்தது.